காத்திருங்கள்… அந்த நாள் பயங்கரமான நாள்… இயக்குனர் டுவிட்

சென்னை:
காத்திருங்கள்… அந்த நாள் பயங்கரநாள் என்று டுவிட் போட்டுள்ளார் தமிழ்படம்2 இயக்குனர் அமுதன். எதற்காக தெரியுங்களா?

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப்படம் 2 படத்திற்காக தான் அனைவரும் வெயிட்டிங். படத்தின் பாடல்கள், டிரைலர் என ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இதுநாள் வரை பட ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்த படக்குழு தற்போது செம க்ளூ கொடுத்துள்ளனர். இயக்குனர் அமுதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஜூலை 13ம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் அன்றைய தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!