காத்ரீனா கைப் வெளியிட்டுள்ள ‘ஹாட் வீடியோ’

பாலிவுட் திரையுலகத்தில் கிளாமராக போஸ் கொடுப்பதற்கும் கவர்ச்சியாக நடிப்பதற்கும் பலரும் தயக்கம் காட்டுவதில்லை. சினிமாவில் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதுடன், அவர்களது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அம்மாதிரியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன் இப்படி அடிக்கடி ஏதாவது செய்வார். மேலும், பல நடிகைகளும் அப்படி ‘ஹாட்’ ஆன புகைப்படங்களை வெளியிடுவதுண்டு.

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகையான காத்ரீனா கைப் வெளியிடும் ‘பிட்னஸ்’ வீடியோக்கள், புகைப்படங்கள் ரொம்பவே பிரபலம். அந்த விதத்தில் நேற்று ஒரு வித்தியாசமான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் காத்ரீனா. ஏறக்குறைய பிகினி மாதிரியான உடையில் முட்டி கால் போட்டுக் கொண்டு அவிழ்த்துவிட்ட தலைமுடியை ஒரு பவுடரிலிருந்து பின்னுக்குத் தூக்கித் தள்ளுவது போன்ற அந்த வீடியோ இதுவரை 19 லட்சம் பார்வைகளைப் பெற்றுவிட்டது.

பிரபலம் ஆக, அதுவும் பெண் பிரபலமாக இருந்து ஒரு விடியோவைப் பதிவிட்டால் பரபரப்புக்கும் பஞ்சமில்லை, பார்வைகளுக்கும் பஞ்சமில்லை.

Sharing is caring!