காமெடி நடிகர் சப்தகிரியை அறைந்தார்

பிரகாஷ்ராஜ் தெலுங்கில் ‘ஹலோ குரு பிரேமகோசமே’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அந்தப்படத்தில் தன்னுடன் நடித்த காமெடி நடிகர் சப்தகிரியை அறைந்தார் என பரபரப்பான தகவல் வெளியானது.

அதுவும் நூறு பேருக்கு மேல் துணை நடிகர்கள் பங்கேற்று நடித்த ஒரு ரயில்வே ஸ்டேஷன் காட்சியில் தான் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரகாஷ்ராஜோ, அது தவறான செய்தி.. நான் ஏன் அவரை அடிக்கப்போகிறேன்..?, அவர் வளர்ந்து வரும் நடிகர், அவர் முதன்முதலாக இயக்குனராக மாறியதற்கு கூட நான் வாழ்த்து சொன்னேனே” என மறுத்துள்ளார்.

அதேசமயம், இந்தப்படத்தின் இயக்குனர் நிக்கினா திரிநாத ராவ், இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கவும் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என மறுக்கவும் இல்லை.

Sharing is caring!