காமெடி நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்

நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு தனி பாணியில் நகைச்சுவையை ஏற்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தவர் மனோபாலா. அவரின் தோற்றமே அவருக்கு பெரும் பக்க பலம் என கூறலாம்.

பிரபல நடிகர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் இன்று திருமணம் கோலகலமாக நடைப்பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பிரபல காமெடி நடிகருமான மனோபாலா அவரின் மகன் ஹரீஷ்க்கும், பிரியா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

மேலும் நேற்று மாலை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சிவகார்த்திகேயன், சதீஷ், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குநர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Sharing is caring!