காமெடி நடிகை மதுமிதாவுக்கு வரும் 15ம் தேதி திருமணம்

சென்னை:
காமெடி நடிகை மதுமிதா திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் தேனடை என்ற அடை மொழிக்கு சொந்தக்காரரானவர் மதுமிதா. இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்படம் குறித்தும் நடித்த அனுபவம் பற்றியும் நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார். இப்போது அவருக்கு திருமணம் என்ற செய்தி அதிரடியாக வந்துள்ளது. வரும் 15ம் தேதி கோயம்பேட்டில் உள்ள பெரிய ஹோட்டலில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

இவருடைய தாய்மாமா மகன் மோசஸ் ஜோயல் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம். அவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளாராம். பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராகவும் உள்ளாராம்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!