காயம்குளம் கொச்சுன்னி படம் மிகப்பெரிய வெற்றி

மலையாளத்தில் சில தினங்களுக்கு முன் வெளியான காயம்குளம் கொச்சுன்னி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற கொள்ளையன் ஒருவனின் கதையாக இதை இயக்கியுள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்துள்ளனர்..

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, தான் அடுத்தாததாக கடலை மையப்படுத்தி ஒரு கதையை உருவாக்கி வருவதாகவும், அதிலும் நிவின்பாலியே கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

காயம்குளம் கொசுன்னியின் வெற்றியை தொடர்ந்து அடுத்தபடத்திலும் இணைகிறது இந்தக்கூட்டணி. வரலாற்று பின்னணியில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு தி பைரேட்ஸ் ஆப் டிகோ கார்ஸியா என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Sharing is caring!