காயம்குளம் கொச்சுன்னி பாகுபலி-2 சாதனையை முறியடிக்குமா?

மலையாள சினிமாவில் சற்று இடைவெளிக்குப்பிறகு ஒரு வரலாற்றுப்படமாக வெளியாக இருக்கிறது ‘காயம்குளம் கொச்சுன்னி’.. வரலாற்றுப்படம் என்பதால் ஏதோ மாமன்னரை பற்றிய படம் என நினைத்துவிட வேண்டாம். கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த ஒரு சாகச திருடன் பற்றிய படம் தான் இது.

நிவின்பாலி டைட்டில் ரோலில் நடிக்க, அவரது குருவாக இதிகரா பக்கி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்லால். கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். வரும் அக்-11ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப்படம் கேரள ரிலீஸில் இன்னும் ஒரு புதிய சாதனையை படைக்க உள்ளது.

அதாவது கேரளாவில் மட்டும் சுமார் 3௦௦ தியேட்டர்களில் வெளியாக உள்ள இந்தப்படத்தை முதல் நாளில் மட்டுமே மொத்தம் 16௦௦ காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்துள்ளார்களாம். இதற்கு முன்னதாக பாகுபலி-2வுக்கு 137௦ காட்சிகள் திரையிடப்பட்டதே அங்கே சாதனையாக இருந்தது. மோகன்லால்-நிவின்பாலி என இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பதால் இந்த சாதனையை நிகழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.

Sharing is caring!