‘காயம்குளம் கொச்சுன்னி’ பாகுபலி-2 படத்தின் சாதனையை முறியடித்தது

மலையாளத்தில் கடந்த வியாழனன்று மோகன்லால்-நிவின்பாலி நடித்த ‘காயம்குளம் கொச்சுன்னி’ என்கிற படம் வெளியானது. கேரளாவில் மட்டும் 35௦ திரையரங்குகளில் வெளியான இந்தப்படம், முதல்நாளில் சுமார் 16௦௦ காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டு, அதற்கு முந்தைய பாகுபலி-2 படத்தின் சாதனையை முறியடித்தது.

அதேபோல முதல்நாள் கேரளாவில் மட்டும் ரூ 5.6 கோடி வசூலித்து புலிமுருகன் படம் தன்னிடம் வைத்திருந்த சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது காயம்குளம் கொச்சுன்னி. அதேபோல உலகம் முழுதும் முதல் நாள் வசூலாக ரூ 9.5 கோடி வசூலித்துள்ளதும் இன்னொரு சாதனையாகும்.

மோகன்லாலும் நிவின்பாலியும் இணைந்து நடித்ததே இந்த சாதனைக்கு காரணம் என விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Sharing is caring!