காருக்கு ரஹ்மான் பெயரை சூட்டிய ரசிகர்

புதிதாக வாங்கிய காரின் இலக்கத் தகட்டில் இசைப்புயல் A.R.ரஹ்மானின் பெயரைப் பதித்த ரசிகருக்கு, பாதுகாப்பாக செலுத்துங்கள் என, ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

ரஹ்மானுக்கு உலகெங்கிலும் ரசிகர் கூட்டம் இருக்கின்ற நிலையில், அவரது அதிதீவிர ரசிகர் ஒருவர் தான் வாங்கிய புதிய காருக்கு A.R.ரஹ்மானின் பெயரை சூட்டியுள்ளார்.

இந்த விடயத்தைக் குறிப்பிட்டு, ரஹ்மான் சேர் நான் எப்போதும் உங்களுடைய தீவிர ரசிகராக இருப்பேன். இன்று நான் எனது கனவுக் காரை வாங்கியுள்ளேன். அதற்கு நான் மிகவும் விரும்புவோரின் பெயரை வைக்க விரும்பினேன். உங்களுடைய இசையினால் எனது வாழ்க்கையை மாற்றியமைக்கு நன்றி என, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த ரசிகரின் பதிவைக் குறிப்பிட்டு, பாதுகாப்பாக செலுத்துங்கள் என, A.R. ரஹ்மான் பதிலளித்துள்ளார்.

Sharing is caring!