கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் கீர்த்திசுரேஷ்

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இறுதியாக தளபதியுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் சற்று பிஸியாகியுள்ளார்.

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக்கின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!