கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி?

சென்னை:
இன்னொரு கதையை ரெடி செய்ய சொல்லியிருக்காரா ரஜினி என்ற கேள்விதான் கோலிவுட்டில் உலா வருகிறது. என்ன விஷயம் தெரியுங்களா?

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் முன்னிலையில் உள்ளார். அவரது இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கவுள்ளார், அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பேட்ட படத்தை செம மாஸ் படமாக கொடுத்துள்ளதால் கார்த்திக் சுப்புராஜிடம் மீண்டும் ஒரு கதையை தயார் செய்யுமாறு ரஜினி கூறியுள்ளாராம். மேலும் இது சாத்தியமானாலும் முருகதாஸ் படத்திற்கு பிறகு தான் நடக்கும் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!