கார்த்தியும் என்னை பயன்படுத்தினார் — நடிகை ஸ்ரீரெட்டி

நடிகர் கார்த்தி தன்னை வேறு வகையில் பயன்படுத்திக்கொண்டார் என நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக திரையுலகில் பிரபலமானவர்களின் பட்டியலை அறிவித்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. அவரது பெயரைக் கேட்டால் தமிழ், தெலுங்கு திரையுலக அலறித்துடிக்கிறது.  இஅவரது செயலுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் நடிகர் கார்த்தி மீடியாக்கள் முன் வந்து எதிர்ப்பை பலமாக காட்டி வருகிறார்.  நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் அவர், ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அண்மையில் கூறியிருந்தார்.  சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த கடைக்கூட்டி சிங்கம் மாபெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கார்த்தி குறித்து ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் மறைமுகமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  அதில்’ நான் என்னை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். என்னை எப்படி எல்லாம் தங்கள் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார்கள் என்று நினைக்கும்போது என்னை நினைத்து எனக்கே வருத்தமாக இருக்கிறது. கவலை வேண்டாம் மிஸ்டர்… நீங்களும் உங்கள் படத்தின் பிரமோஷனுக்காக பயன்படுத்திக்கொண்டீர்கள்… கவலையில்லை… உங்கள் படம் வெற்றிபெற்றால் எனக்கு மகிழ்ச்சியே. பாதிக்கப்பட்ட ஒரு நபரைக் கூட உங்கள் படத்தின் பிரமோஷனுக்காக நீங்கள் பயன்படுத்தத் தவறவில்லை… உங்கள் சினிமா தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பதற்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.

எந்த ஒரு பெண்ணும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மரியாதையான நிலையை நீங்கள் எனக்கு அளித்திருக்கின்றீர்கள். இந்த மரியாதைக்குரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்களிடமிருந்து நான் ஒரு பைசா கூட பெற்றதில்லை என்பதுதான் உண்மை. இன்று என்னுடைய வாயை காரணத்தோடு மூடிக்கொள்கிறேன். உங்களை நான் மறந்திருப்பேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்களை பிளாக்மெயில் செய்வதாக நினைத்தால் அதை நிரூபியுங்கள். நான் என்னுடைய தலையை வெட்டிக்கொண்டு உயிரை இழக்கிறேன்.

மினி தொடர்: ஸ்ரீ ரெட்டி அதிர்வலைகள் 2 – யாருக்கு அசிங்கம்?

பாலியல் தொழிலைச் செய்யும் பெண் குறைந்தபட்சம் ஏதாவது பணத்தையாவது பெறுகிறாள். ஆனால், நான் ஒரு பைசா கூட பெற்றதில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால், தங்களுடைய அனைத்து பாலியல் தேவைகளும் முடிந்தபிறகு என்னை வெறும் வயிற்றில்தான் அனுப்பினார்கள். எனக்கு ஒருவேளை உணவு கூட கொடுத்தது இல்லை. நடிகர் சங்கத்தின் நேரத்துக்காக நான் காத்திருக்கிறேன்… என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!