கார்த்தி படத்தில் ஜோடியாகிறார் நடிகை ராஷ்மிகா?

சென்னை:
நடிகர் கார்த்தி அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் ராஷ்மிகா ஹீரோயின் என கூறப்படுகிறது.

சமீபத்திய காலத்தில் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராஷ்மிகா தான். தமிழக இளைஞர்களின் வாட்சப் ஸ்டேட்டஸில் அதிகம் பயன்படுத்தியது ராஷ்மிகாவின் போட்டோ/பாடல் வீடியோவாகத்தான் இருக்கும்.

கன்னட சினிமா, தெலுங்கு சினிமா என கலக்கிவந்த அவர் எப்போது தமிழ் சினிமாவுக்கு வருவார் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கேட்டு வந்தனர்.

அது நிறைவேறும் விதத்தில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகர் கார்த்தி அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் ராஷ்மிகாதான் ஹீரோயின் என கூறப்படுகிறது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!