கார் பரிசு….பியார் பிரேமா காதல் பட இயக்குநருக்கு யுவனின் பரிசு

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது பியார் பிரேமா காதல். இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குநர் இளம் இயக்க, யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். அவர் தயாரித்த முதல் படம் இதுவாகும். மேலும் இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் இளனுக்கு யுவன் கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். இதுகுறித்து இளன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இவர்கள் படம் முடிந்த உடனேயே எனக்கு காரை பரிசளிப்பதாக தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்கு பிறகு அல்ல. அன்புக்கு நன்றி யுவன் சங்கர் ராஜா சார்” என் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!