காலா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து முதலிடம் பிடித்த சர்கார்

சென்னை:
ஒரே நாளில் சர்கார் படம் சென்னையில் மட்டும் ரூ.2.37 கோடி வசூல் வேட்டையாடியுள்ளது.

தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியான சர்கார் திரைப்படம் சென்னையில் மட்டும் 2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் – விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிய சர்கார் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 80 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 57 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. படத்திற்காக டிக்கெட் வாங்க ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தனர். எதிர்பார்த்தபடியே படம் பக்கா மாஸ் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நாளில் சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் ரூ. 2.37 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் விஜயின் சர்கார் திரைப்படம் காலா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. மெர்சலையடுத்து மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் விஜய். இது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!