காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா…!

சென்னை:
சர்வாதிகாரி ராணி டாஸ்க்கில் தாடி பாலாஜியிடம் ஓவராக நடந்து கொண்டதற்காக அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.

நடிகை ஐஸ்வர்யா தத்தா சர்வாதிகாரி டாஸ்க் செய்யும்போது நடிகர் பாலாஜி மீது குப்பை கொட்டி அசிங்கப்படுத்தினார். அது ரசிகர்கள் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியதால் ஐஸ்வர்யாவை திட்ட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பாலாஜியிடம் ஐஸ்வர்யா சென்று மனமுருகி மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு அவர் “என்னை உன் சித்தப்பா போல நினைத்துகொள், எப்ப வேண்டும்னாலும் போன் செய், நீ வர வேணாம் நானே வந்து உன்னை பார்க்கிறேன்” என கூறினார்.

மேலும் ஐஸ்வர்யா பாலாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!