காளிதாஸுக்கு கைகொடுக்க தயாராகும் ஜீத்து ஜோசப்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கடந்த மூன்று வருடங்களில் இன்னும் ஒரு நல்ல அறிமுகத்தை அவரால் பெறமுடியவில்லை. தமிழில் அவர் அறிமுகப்படமாக நடித்த ‘ஒருபக்க கதை’ படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்தநிலையில் தான், பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காளிதாஸ். இதை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் காளிதாஸ் அறிவித்திருந்தாலும், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் இந்த படத்திற்கான கதாநாயகி தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார்.

கடந்த ஜனவரியில் மோகன்லால் மகன் பிரணவை வைத்து ஆதி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் காளிதாஸுக்கும் கைகொடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

Sharing is caring!