கிடைத்தது…சன்.டிவிக்கு கிடைத்தது…சண்டகோழி 2 ன் சாட்டிலைட் உரிமம் கிடைத்தது

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சண்ட கோழி 2’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான சன் நெட்வொர்க் நிறுவனம் வாங்கியுள்ளது.

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரன், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிப்பில் 2005ல் வெளியான படம் ‘சண்ட கோழி’. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தின் தொடர்ச்சியாக  தற்போது ‘சண்ட கோழி 2’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நடிகர் விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தயாரித்துள்ள ‘சண்ட கோழி 2’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தற்போது சன் நெட்வொர்க் நிறுவனம் வாங்கியுள்ளது.

தெலுங்கில் இந்தப் படம் ‘பண்டம் கொடி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படம் ரூ. 6 கோடிக்கு விலை போனது. யு.வி. வம்சி என்பவர் இந்தப் படத்தை வாங்கி ஆந்திராவின் குண்டூர் பகுதியில் வெளியிடவுள்ளார்.

 

Sharing is caring!