கிட்டத்தட்ட 3 மணிநேரம் ரன்னிங் டைம்… பேட்ட படம்தான்!

சென்னை:
கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஓடும் பேட்ட படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது செம எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பேட்ட படத்தின் ரன்னிங் டைம் தற்போது வெளிவந்துள்ளது,

சுமார் இப்படம் 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும் என குறிப்பிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் இந்த காலக்கட்டத்தில் இத்தனை மணி நேரமா? என்று ஷாக் ஆகியுள்ளனர். இருந்தாலும் ரஜினி படம் எத்தனை மணி நேரம் ஓடினாலும் பார்த்து ரசிப்பவர்கள் உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!