கிரிக்கட் வீரரை நடிக்க அழைத்த விஜய் தேவ்கன்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது 50வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.  அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக் கூறிய பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்தார் அஜய் .

மேலும், இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அண்ணன்  குருனால் பாண்டியா, அஜய் தேவ்கன் பிறந்தநாளை முன்னிட்டு  வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த ட்விட்டரில் தானும், அஜய் தேவ்கன்னும்  இணைந்திருக்கும் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டிருந்தார் குருனால் பாண்டியா.  இவர் ஐபிஎல் 2019 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின்  விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

குருனால் பாண்டியாவின் ட்வீட்டிற்கு நன்றி தெரிவித்த அஜய் தேவ்கன், நன்றி குருனால். இருவரும் சேர்ந்து டபுள் ஆக்‌ஷன் ரோல் படம் ஒன்று பண்ணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!