கிறுக்கன்… சென்ட்ராயனை மோசமாக திட்டிய மஹத்

சென்னை:
கிறுக்கன் என்று சென்ட்ராயனை மோசமாக திட்டியுள்ளார் மஹத். ஆனால் அப்போதும் பொறுமை காத்துள்ளார் நடிகர் சென்ட்ராயன்.

பிக்பாஸ் 2வது சீசன் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்கள் இடையே இதுநாள்வரை சிறிய சிறிய சண்டையாக வந்துகொண்டிருந்தது. ஆனால் மஹத் மற்றும் சென்றாயன் இடையே பெரிய சண்டை நடந்து விட்டது.

தண்ணீர் குடித்த கிளாஸ் தொடர்பாக சென்ட்ராயன் மற்றும் மஹத் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது “கிறுக்கன்” என சென்ட்ராயனை மோசமாக திட்டினார் மஹத்.

பின்னர் இருவரும் இதுபற்றி பேசும்போது “கோபம் மோசமானது. நீ போய் முதலில் டாக்டரை பாரு. என்னுடன் இனி பேசாதே” என சென்ட்ராயன் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!