கீர்த்தி சுரேஷின் ‘ச’ வரிசைப் படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அவர் நாயகியாக நடித்து இதுவரை ‘இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்கள்தான் வெளிவந்துள்ளன. இவற்றிலும் ‘ரஜினி முருகன்’ படம் மட்டுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும், கீர்த்தி மிகவும் புகழ் வாய்ந்த நடிகையாக மாறிவிட்டார்.

அவர் நடித்து அடுத்ததாக ‘சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்க்கார்’ என ‘ச’ வரிசைப் படங்கள் வெளிவர உள்ளது ஒரு ஆச்சரிய ஒற்றுமை. இவற்றில் ‘சாமி ஸ்கொயர்’ நாளை மறுநாளும், ‘சண்டக்கோழி 2’ அடுத்த மாதமும், ‘சர்க்கார்’ அதற்கடுத்த மாதமும் வெளிவர உள்ளன. இந்த மூன்று படங்களுமே முழுமையான கமர்ஷியல் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் கீர்த்தி சுரேஷ் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்.

இந்த மூன்று படங்களும் வெளியீட்டை நெருங்கிவிட்டதால் அடுத்த வாய்ப்புகளுக்காக கீர்த்தி கதை கேட்க ஆரம்பித்துவிட்டாராம். அதோடு அவருடைய சம்பளமும் உயர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Sharing is caring!