கீர்த்தி சுரேஷ் கடும் அதிருப்தியில்

தன்னுடைய கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று சொல்லித்தான், நடிகை கீர்த்தி சுரேஷ் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். அதேபோலத்தான், நடிகர் விஜய் நடித்து வெளியான ‘சர்க்கார்’ படத்திலும், அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், படம் வெளியான பின், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படத்தில் பெரிதாக இல்லாததோடு, அவரை ஒரு பொம்மையாகத்தான் நடிக்க வைத்திருக்கின்றனர். இதனால், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் மீது கீர்த்தி சுரேஷ் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இனி நடிக்க இருக்கும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு படத்தில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளப் போகிறாராம். அதற்காக, படம் தயாரிக்கத் துவங்கும் முன்பே, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம், அதற்கான உறுதிமொழியையும் எழுதி வாங்கிக் கொள்வது குறித்தும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Sharing is caring!