குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்

பாலிவுட்டில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ஒரு கலக்கு கலக்கிய படம் தான் ‘குச் குச் ஹோதா ஹே’. ஷாருக்கான், சல்மான் கான், கஜோல், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்த இந்தப்படத்தை இயக்கி திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார் இயக்குனர் கரண் ஜோஹர்.

இந்தப்படம் வெளியாகி இருபது வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று அதை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளனர் இந்தப்படத்தில் பணியாற்றியவர்கள். இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் கரண் ஜோஹர் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இந்தப்படத்தில் நடிக்கும்போது ஷாருக்கானுக்கு திரையில் சிரிக்கவே தெரியாது என்றும், அதனால் அவரை சிரிக்க வைத்து காட்சிகளை படமாக்க பலமுறை ரீடேக்குகள் எடுக்கவேண்டி இருந்தது என்றும் கூறினார். அதனாலேயே ஷாருக்கானை வைத்து சிரிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கும்போது அருகில் இருந்து ஜோக்குகளை சொல்லி அவரை சிரிக்க வைத்து, அப்படி சிரிப்பதை படம் பிடித்து சமாளித்தோம் என கூறினார் கரண் ஜோஹர்.

Sharing is caring!