குடிபோதையில் போலீசாரிடம் சிக்கிய காயத்ரி ரகுராம்

சென்னை:
குடிபோதையில் போலீசாரிடம் மாட்டி அபராதம் கட்டியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர்களில் நடிகை காயத்ரி ரகுராமும் ஒருவர். 2000ம் காலங்கட்டத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த இவர் நடன இயக்குனரும் ஆவார்.

இந்நிலையில் இவர் குடிபோதையில் தனது காரினை ஓட்டி சென்று போலீசாரிடம் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் சென்னை திரு.வி.க பாலம் பகுதியில் நடந்துள்ளது.

இதனால் இவருக்கு அபிராமபுரம் போலீஸார் 3500 ரூபாய் அபராதத்தை விதித்து சில எச்சரிக்கைகளுடன் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!