குடியரசு தினத்தில் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இந்தியாவின் முதல் விண்வெளி படமான ‘டிக் டிக் டிக்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தியாவின் முதல் விண்வெளிப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு இப்படத்தின் டிரைலர் உருவாகி இருப்பதாக பலரும் பாராட்டி, புகழ்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. டிசம்பர்-11ம் தேதி யுவன் சங்கர் ராஜா, சுனிதா சாரதி பாடியுள்ள ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.அடுத்த வருடம் ஜனவரி மாதம் குடியரசு தினத்தில் ‘டிக் டிக் டிக்’ படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் சிறந்த நாளியில் வெளியாவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sharing is caring!