குடியில் தன்னை மறந்த முத்துக்காளை… மீண்டார்… படத்தில் நடிக்கிறார்

சென்னை:
குடி…குடி என்று இருந்த முத்துக்காளை இப்போ திருந்தி மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

முத்துக்காளை நீண்ட வருடங்களாக சினிமா பக்கம் காணவில்லை, காரணம் குடி. இவரும் அல்வா வாசுவும் குடிப்பதை பார்த்த வடிவேலு கூட இப்படியே குடித்தால் முதலில் வாசு அடுத்து நீ சாகப்போற என்று கூறியிருந்தாராம்.

அவரின் அந்த வார்த்தைக்கு பின் தன் மனதில் பயம் வந்துவிட்டதாகவும் குடியை நிறுத்திவிட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் முத்துக்காளை.

குடிக்கு அடிமையாகி மனைவி, குழந்தைகளை கவனிக்காமல் இருந்த முத்துக்காளை வாழ்க்கையில் இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் பாலிவுட்டில் மேரே இந்தியா என்ற படத்தில் நடிக்கிறாராம். அப்படம் தமிழில் நம் இந்தியா என்ற பெயரிலும் உருவாகி வருகிறதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!