குண்டு படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குனர் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். தற்போது அவரது உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பா.ரஞ்சித் நடத்திய தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசை நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற தென்மா இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கபாலி, காலா படங்களில் பணியாற்றிய ராமலிங்கம் ஆர்ட் டைரக்டராக பணியாற்றுகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் ஹீரோயின் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டது. ரஞ்சித், முண்டாசுப்பட்டி ராம்தாஸ் கலந்து கொண்டு நடித்தனர். படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடும் வகையில் வேகமாக படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் நடிக்கலாம் என்று தெரிகிறது. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ஆனந்தியே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Sharing is caring!