குண்டு வெடிப்பில் இருந்து தப்பிய பிரபல நடிகை

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடுப்பில் சிக்காமல் தான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதா நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளான இன்று , இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில், படப்பிடிப்பு காரணமாக கொழும்பு சென்றுள்ள நடிகை ராதிகா, அங்குள்ள சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் தங்கியுள்ளார். அங்கு இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர்தான் அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டதாக தெரிகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்காமல்,  இறைவனின் அருளால் தான் உயிர்தப்பியுள்ளதாகவும், இச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தமது ட்விட்டர் பதிவில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!