குரு-சிஷ்யன்கள் இணைந்து நடிக்க உள்ள படம்

சென்னை:
ஜோதிகா நடிக்க உள்ள புதிய படத்தில் குரு, சிஷ்யன்கள் இணைகின்றனர் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

காற்றின் மொழி படத்துக்கு பிறகு ஜோதிகா தற்போது ராஜ் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்து வரும் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன.

இந்நிலையில் ஜோதிகா அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையாக உருவாக உள்ள இந்த படத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் மூவரும் நடிக்கிறார்கள். பாரதிராஜாவிடம் பாக்யராஜும், பாக்யராஜிடம் பார்த்திபனும் உதவி இயக்குனராக இருந்தவர்கள். முதன்முறையாக மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க இருக்கிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!