குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில், நடிகர் விஜய் குடும்பத்தினர், இயக்குநர் அட்லி குடும்பத்தினர் மற்றும் நடிகை வரலட்சுமி

தீபாவளிக்கு பரபரப்பாக வெளியாகி இருக்கும் அரசியல் கதையம்சம் உள்ளப் படம் ‘சர்க்கார்’. ‘இந்தப் படத்தை முதல் நாளில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டும்; அப்போதுதான், ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? படத்துக்கான உண்மையான வரவேற்பு ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் அறிய முடியும்’ என, நடிகர் விஜய்யிடம் சொன்ன அவரது மனைவி சங்கீதா, ‘சென்னைக்குள்ளேயே இருக்கும் தியேட்டர்களில் படம் பார்ப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதனால், சென்னைக்கு வெளியே அல்லது புறநகரில் இருக்கும் ஒரு தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்’ எனவும் கூறியிருக்கிறார்.

அதையடுத்து, படம் ரிலீஸ் ஆன, தீபாவளி நாளில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில், நடிகர் விஜய் குடும்பத்தினர், இயக்குநர் அட்லி குடும்பத்தினர் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அனைவரும், சென்னை, குரோம்பேட்டை, வெற்றி தியேட்டரில், விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தை பார்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வரும்போது, விஜய்யின் மனைவி சங்கீதா, ரசிகர்கள் சிலரிடம் பேசி, அவர்கள் கருத்துக்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார்.

Sharing is caring!