குற்றம் சொல்லும் பெண்களை கேலி செய்யக்கூடாது… இயக்குனர் வெற்றிமாறன் சொல்றார்

சென்னை:
மீ டூவில் குற்றம் சொல்லும் பெண்களை கிண்டல் செய்யக்கூடாது என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

மீ டூ ஹேஷ் டேக்கின் கீழ் அண்மை காலமாக பலர் பாலியல் புகார்களை கூறி வந்தார்கள். இந்த குற்றச்சாட்டில் சினிமாவில் சில முக்கிய பிரமுகர்களும் சிக்கினர். வைரமுத்து – சின்மயி, சுசிகணேசன் – லீனா, ஜான் விஜய் – ஸ்ரீ ரஞ்சனி என்று தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வந்தது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல விஷயங்கள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளது.1

இந்நிலையில் மீ டூ விவகாரம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:

மீ டூ விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்ற மனநிலை மாறவேண்டும். மீ டூ விவகாரம் தொடர்பாக பேசக்கூடிய பெண்களை கேலி செய்யக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!