குழப்பத்தில் நடுவர்கள்….கனடா வாழ் ஈழத்து சிறுமியா? சிங்கப்பூர் வாழ் தமிழ் சிறுவனா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த சிறுவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்கள் மூவரின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது போட்டியாளராக கனடா வாழ் ஈழத்து சிறுமி சின்மயி தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருடன் சிங்கப்பூர் வாழ் தமிழ் சிறுவன் சூர்யா மற்றும் பூவையர் ஆகியோர் நேருக்கு நேர் போட்டியிட்டனர்.

போட்டிகள் கடுமையாக சென்று கொண்டிருந்த தருணத்தில் சூர்யா மற்றும் சின்மயி ஆகியோரில் யார் வெற்றியாளர் என்பதை தெரிவு செய்ய முடியாமல் நடுவர்களே குழப்பத்தில் எழுந்து சென்று சில மணித்தியாளம் கலந்தாலோசித்து போட்டியை நடுநிலைப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை, இறுதி சுற்றில் மீண்டும் இருவருக்கும் பலத்த போட்டிகள் இடம்பெற்று அதில் ஈழத்து சிறுமி சின்மயி வெற்றி பெற்றார்.

மேலும், எல்லா நிகழ்ச்சியிலும் சிறந்த போட்டியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக wild card entry வழங்கப்படும். எதிர்வரும் சனிக்கிழமை wild card entry மூலம் யார் போட்டியாளராக களம் இறங்க போகின்றார்கள் என்று பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த சுற்றுகளில் வெளியேறியிருந்த சிறுவர்களின் திறமையை பற்றி சொல்ல தேவையில்லை. இந்நிலையில் புதிதாக வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் சிறுமி அஹானாவை கட்டிப்பிடித்து நடுவர்கள் முதல் அரங்கமே கொண்டாடுகின்றது.

இந்நிலையில் அவர்தான் நான்காவது போட்டியாளராக உள்ளே போகின்றாரா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொருத்திருந்து பார்ப்போம் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று, மேலும், இதில் யார் வெற்றி பெற்றாலும், வெளியேறினாலும் அனைவருக்குமே பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உறுதி.

இதுவே சிறந்த வெற்றியும் கூட, அந்த வகையில் பல துன்பங்களுக்கும் வறுமைகளுக்கும் மத்தியில் போட்டிக்கு வந்த சிறுவன் பூவையராக்கு விஜய் படத்தில் நடிப்பதற்கும் பாடுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!