‘குஷி’ படத்தின் இரண்டாவது பாகம்

’36 வயதினிலே’ படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கிய நடிகை ஜோதிகா, அந்தப் படத்தோடு ஓய்ந்து விடுவார் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செங்கச் சிவந்த வானம்’ என வரிசையாக நடிக்கத் துவங்கி இருக்கும் அவர், அடுத்ததாக, வித்யா பாலன் நடித்த ‘தும்ஹாரி சுலு’ என்ற இந்திப் படத்தின் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கும் ஜோதிகா கூறியதாவது:

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பது என தீர்மானித்துள்ளேன். படத்தில் நான் நடிக்கும் கேரக்டர் வெயிட்டாக இருக்க வேண்டும். ஏற்கனவே நான் நடித்த ‘குஷி’ படத்தின் இரண்டாவது பாகத்தை சில எடுக்க தீர்மானித்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அப்படி எடுக்கும்பட்சத்தில், கட்டாயம் நடிப்பேன். ஆனால், நான் ஏற்கும் அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும்; புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வது போல இருக்க வேண்டும்.

இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.

Sharing is caring!