கூட்டத்துக்கு நடுவிலேயே அடித்து துவைத்து விட்டார்

நடிகை சரீன் கான், சமீபத்தில் அவுரங்காபாத்தில், நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர், நடிகை சரீன் கானை, கரங்களால் சீண்டியுள்ளார். அதை அருவெறுப்பாக உணர்ந்த சரீன் கானுக்கு கடும் கோபம் வந்து விட்டது. உடனே, சம்பந்தப்பட்ட நபரை, கூட்டத்துக்கு நடுவிலேயே அடித்து துவைத்து விட்டார். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் விடியோ பதிவு எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.

இது குறித்து சரீன் கான் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் பிரச்னைகளை பெண்களாகிய நாமே நேரடியாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளி பார்வைக்கு அதெல்லாம் எப்படி இருக்கிறது என்ற கவலையெல்லாம் ஒரு போதும் இருக்கக் கூடாது. பெண்ணை சீண்டினால், உடனே அதற்கு தண்டனை கிடைக்கும் என எல்லோரும் உணர வேண்டும். மூடிய கதவுக்குள் நடந்தாலும் சரி; வெளியே நடந்தாலும் சரி… ஒரு ஆண் பெண்ணிடம் விருப்பமின்றி தகாத முறையில் நடந்து கொண்டால், உடனடியாக அவனுக்கான தண்டனையை கொடுக்க வேண்டும்; இதை ஒரு பெண்ணாக அனைவரும் செய்வீர்கள் என நம்புகிறேன். நான் பொதுமக்கள் அறிந்த ஒரு நபராக இருப்பதாலேயே, யாரும் என்னிடம் தவறாக நடந்து கொண்டால், அதைப் பார்த்து சும்மா இருக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை, எந்தப் பெண்ணாக இருந்தாலும், அவருக்கு மற்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறதோ, அது இருக்க வேண்டும். இல்லையென்றால், சீண்டலுக்கு பதிலடிதான் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sharing is caring!