கெட்டவன் என்பது சிம்பு???????

தமிழில் ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். இவர் சிம்பு நடித்த கெட்டவன் படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்று பின்னர் நின்று போனது. படம் மீண்டும் உருவாகுமா இல்லையா என்பதும் தெரியாது.

லேகா வாஷிங்டன் தற்போது அவருடைய டுவிட்டரில் ஒரே ஒரு வார்த்தையில் மீ டு விவகாரத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ஒரு வார்த்தை, கெட்டவன், மீ டூ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் தெளிவாக சொல்லாமல் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளதால் அந்த கெட்டவன் என்பது சிம்புவைக் குறிக்கலாம் என பலரும் அந்த கமெண்ட்டில் சிம்புவா எனக் கேட்டு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

லேகா தெளிவாகக் குறிப்பிடாததால் அவர் யாரைச் சொல்கிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும், சிம்பு பெயரை தனுஷ் ரசிகர்கள் வேண்டுமென்றே இதற்குள் இழுத்துவிட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Sharing is caring!