கெட்டவன் படம் நின்று போக தனுஷ்தான் காரணம்… இயக்குனர் குற்றச்சாட்டு

சென்னை:
சிம்புவை வைத்து எடுக்கப்பட்ட கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு தனுஷ்தான் காரணம் என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளது அதிர்வலையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து கெட்டவன் படத்தின் இயக்குனர் நந்து ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஆரம்பத்தில் சிம்புவிடம் கதை சொன்னேன். பின் ஜீவா, பரத் ஆகியோரிடம் கதை சொன்னேன். சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தனுஷை சந்தித்து கதை சொல்ல சென்றேன். ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின் சிம்புவே கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் துவங்க பணிகள் நடந்தது. அப்போது சிம்புவுக்கு போன் செய்த தனுஷ் “நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். இப்படி நன்றி கெட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்?” என கேட்டுள்ளார்.

அதனால்தான் எங்களுக்கு இடையே மனக்கசப்பு ஆரம்பித்தது.
ஒரு சமயத்தில் படத்தையே நிறுத்த அதுவே காரணம் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!