கேஜிஎப் படம் 4 நாளில் ரூ. 80 கோடியை அள்ளியது

சென்னை:
கேஜிஎப் படம் 4 நாளில் ரூ. 80 கோடியை அள்ளியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேஜிஎப் கன்னட சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷம் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கன்னட சினிமாவின் முதன் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணையும் படமாக கேஜிஎப் புகழை பெறும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!