கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றியது

சமீபத்தில் தான் விஜய்யின் சர்கார் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். அதையடுத்து அப்படத்தின் இரண்டு சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியிடப்பட்டதோடு இசை விழாவும் நடை பெற்றது. இந்த நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் புரொமோஷன்களையும் இன்று முதல் விஸ்வாசம் திருவிழா என்று தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில், விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்றைய தினம் விஸ்வாசம் படத்தின் டீசர் குறித்த செய்திகள் ஏதேனும் வெளியாகலாம் என எதிர்பார்த்த நிலையில், விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நயன்தாரா நடித்த அறம் படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை பெரும் தொகை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

Sharing is caring!