கேட்டேன்… மெய் சிலிர்த்தேன்… பிரமிப்பில் ஒளிப்பதிவாளர்

சென்னை:
மெய் சிலிர்த்து விட்டேன்… இந்தியன் பார்ட்2 கதையை கேட்டு என்று ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்தியா முழுவதுமே செம்ம ஹிட் அடித்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது.

இதையும் ஷங்கர்தான் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கின்றார். இப்படத்தின் கதையை தனக்கு ஷங்கர் 3 மணி நேரம் சொன்னதாகவும், அதை கேட்டு மெய் சிலிர்த்துவிட்டதாக ரவிவர்மன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போ இந்தியன் 2 லெவல் வேறு லெவலாக இருக்கும் என்று தெரிகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!