கேன்ஸ் விழாவில் அட்டகாசமான உடையில் கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வந்து கலக்கினார். இதைத்தொடர்ந்து இன்று அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும், பலர் கருத்து தெரிவித்து வருகின்ற்னர்.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், பாலிவுட் நடிகைகள் பலரும் வித்தியாசமான உடை அணிந்து ரெட் கார்பெட்டில் வலம் வருவது வழக்கம். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நேற்று இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து சென்றுள்ளார். அதிலும், பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து வலம் வந்தார்.

அவர், கோல்டன் கலர் பட்டு சேலையில் ரெட் கார்ப்பெட்டில் தேவதை போல் காட்சி அளிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்தனர். இந்த நிலையில், இன்றும் அவர் அணிந்துள்ள ஆடை நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

Sharing is caring!