கேரளாவில் விஜய்யின் மாஸ் வசூலை முறியடித்துள்ளது 2.0 படம்

கேரளா:
கேரளாவில் விஜய்யின் மாஸ் வசூலை முறியடித்துள்ளது ரஜினியின் 2.0 படத்தின் கலெக்சன்.

கேரளா விஜய்யின் கோட்டை என்று சொல்லப்படும். அந்த அளவிற்கு அவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் பலம் அங்கு உள்ளது.

மெர்சல் படம் தான் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே அங்கு அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வந்தது.

மேலும் சர்கார் ரூ 14 கோடி வரை அங்கு வசூல் செய்திருந்தது, இந்நிலையில் 2.0 இந்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. 3 நாட்களில் 2.0 கேரளாவில் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். நேற்றுடன் ரூ.20 கோடி வசூலை கடந்தும் விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எப்படியும் இப்படம் மெர்சல் சாதனையை முறியடித்து அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!