கேரளாவில் விமல் படம்

கேரளாவில் விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா படங்களுக்குத்தான் மவுசு அதிகம். சமீபகாலமாக சமுத்திரகனி, சசிகுமார், விஜய்சேதுபதி படங்களையும் கேரள மக்கள் விரும்பி பார்க்க தொடங்கியிருக்கிறார். விமல் மாதிரியான மூன்றாவது வரிசை ஹீரோக்களிடன் படம் முக்கிய நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் தான் வெளிவரும்.

ஆனால், தற்போது விமல், ஆஸ்னா சவேரி, மியா ராய் லியோன் நடித்துள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் கேரளாவில் 100 தியேட்டர்களுக்கு மேல் வெளிவர இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக வருகிற 7ந் தேதி 500 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்கி உள்ள இந்தப் படம் குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். குண்டூர் டாக்கீஸ் ஆந்திராவில் நல்ல வசூலை அள்ளிய படம். ரொமாண்டிக் த்ரில்லர் வகை படம். ஆஸ்னா ஜவேரியும், மியா ராய் லியோனும் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள்

Sharing is caring!