கேரளாவுக்கு 25 இலட்சம்….சூரியா – கார்த்தி உதவி

கேரளாவில், இரு மாதங்களாக, தென் மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பலத்த மழை காரணமாக, கொச்சி, பாலக்காடு, இடுக்கி, மலப்புரம், திருவனந்தபும் உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளக் காடாக மாறியுள்ளன. 28 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானபேர் வீடுகளை இழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கேரளாவிற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. அண்டை மாநிலத்தவர்களும் உதவ முன்வந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் சூர்யா, கார்த்திக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு, அவர்களின் படங்கள் அங்கும் ரிலீஸாகின்றன. இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு சூர்யா, கார்த்தி இருவரும் உதவ முன் வந்துள்ளனர்.

இருவரும் கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.

Sharing is caring!