கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா- ரஹ்மானின் இசை ஆறுதல்

கேரளா கேரளா டோண்ட் வொரி கேரளா என இசைப்புயல் ஏ.ஆர்.ஆர் ரஹ்மான் பாடும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர் கனமழை காராணமாக கேரளாவே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளா நெம்மாரா பகுதியில் நேற்று 3 குடியிருப்புகள் அப்படியே சரிந்து தரைமட்டமாகின. 100 ஆண்டுகளில் இல்லாத மழை கேரளாவில் தற்போது பெய்துள்ளது. 1500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர், அதிவிரைவுப் படையினரால் மீட்கப்பட்ட சுமார் 2.25 லட்சம் மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “முஸ்தப்பா… முஸ்தப்பா… டோண்ட் வொரி முஸ்தப்பா… என்ற பாடலை கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா” என பாடி பதிவிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. முன்னதாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ’கேரளா உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sharing is caring!