கேரளா மக்களுக்கு உதவும் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவுக்கு அழைப்பு

சென்னை:
கேரளா மக்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நயன்தாராவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கியது. இதற்கு மலையாள சினிமா நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி செய்தார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளார்கள்.

சேதம் அதிகம் என்பதால் இன்னும் மக்களுக்கு உதவ மலையாள சினிமா பிரபலங்கள் டிசம்பர் 7 ம் தேதி அபுதாபியில் நட்சத்திர கலைவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இதன் கலெக்‌ஷன் அந்த மக்களுக்கு தானாம்.

மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி, பிருதிவிராஜ் என பல பிரபலங்களுடன் நயன்தாராவிற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர் கலந்துகொள்வாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!