கேரள மக்களுக்கு பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி

கேரளாவில் கடந்த 8ந்தேதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையாலும், நிலச்சரிவாலும் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 300க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது நடிகர் ஜெயம் ரவி, நடிகர் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தலா 10 லட்சம் வழங்கியுள்ளார்கள்.

முன்னதாக, ரஜினி 15 லட்சம், கமல் 25 லட்சம்,விக்ரம் 35 லட்சம்,சூர்யா-கார்த்தி  25 லட்சம், தனுஷ்  10 லட்சம், விஜய் சேதுபதி  25 லட்சம், சிவ கார்த்திகேயன்  10 லட்சம், விஷால்  10 லட்சம், உதய நிதி 10 லட்சம், நயன்தாரா 10 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!