கேவலமாக கூறியவருக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி

சென்னை:
தன்னை பற்றி கேவலமாக சொன்னவருக்கு பதிலடி கொடுத்து அதிர விட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையாக இருப்பது #MeToo புகார்கள் தான். வைரமுத்து, சுசிகணேசன் என்று தொடர்ந்து பலர் மீது தொடர்ந்து அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

புகார் சொல்பவர்களை கொச்சைப்படுத்தும்விதமாக அவ்வப்போது சிலர் கேவலமான போஸ்ட்களை பதிவிடுவார்கள். அந்தவகையில் ரஜினி ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி. எப்படி தெரியுங்களா? அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் என்று. இந்த டுவிட்தான் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!