கைப்புள்ளைக்கு பிறந்தநாள்

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பவர் வடிவேலு. அவர் திரையில் பேசிய பல வசனங்களை இன்று இயல்பாக நம் பேச்சில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பெருமை வேறெந்த நகைச்சுவை கலைஞனுக்கும் கிடைத்ததில்லை.

தமிழில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்கள் பலர் இருந்துள்ளார்கள். ஆனால், சிவாஜியின் நடிப்புத்திறமையுடன் ஒப்பிடும் அளவுக்குப் பெயர் பெற்றவர் வடிவேலு.

இன்று (12) பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான வாழ்த்துகள் குவிந்துள்ளன.

இத்தனைக்கும் 2011-க்குப் பிறகு இன்று வரை 6 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனாலும், ரசிகர்கள் அவரை மறப்பதாக இல்லை.

Sharing is caring!