கொடவா மொழியில் ஒரு படம்

இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மொழிகளில் படங்கள் வெளிவருகின்றன. அந்தவகையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா எல்லை பகுதிகள் சந்திக்கும் குடகு மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பேசும் கொடவா மொழியில் ஒரு படம் தயாராகி உள்ளது.

இது மலையின் உச்சியில் உள்ள பரனே என்ற கிராமத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. படத்தின் பெயரும் பரனே. இந்தப்படம் 3 லட்சம் செலவில் தயாராகி உள்ளது. உள்ளூர் மக்களே நடித்துள்ளனர். தொழில்நுட்ப செலவுகளுக்காக மட்டும் 3 லட்சம் செலவாகி உள்ளது. ஸ்ரீலேஸ் எஸ்.நாயர் என்ற இளைஞர் இயக்கி உள்ளார்.

வெளிநாட்டில் சம்பாதித்து அந்த பணத்தைக் கொண்டு குடகு பகுதியில் பெரிய பங்களாக்கள் கட்டி குடியேறும் வெளியூர் மக்களால் அங்கு காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழும் மக்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பற்றி படம் பேசுகிறதாம். விரைவில் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளிவர இருக்கிறது.

Sharing is caring!